Tuesday 6 July, 2010

Monday 5 July, 2010

யாருடா இவன்?

"யாருண்ணே இவன். பெரிய ரோதனையா போச்சு!"

" அட நீ வேற! வாயை பொத்திக்கிட்டு சும்மா இரு. இப்படி ஒன்னு ரெண்டு லூசுக இங்க வந்து பண்ற அட்டகாசம் சகிக்கல. நிம்மதியா இருந்த இந்த தெருவே இப்ப நாறிப்போச்சு. நமக்கென்ன வம்பு. நம்ம பேச்சு அவன் காதுல விழுந்தா, நம்ம பக்கம் வந்துருவான். நாம என்ன வேலை வெட்டியில்லாமலா இருக்கோம்?. டீயை குடிச்சிட்டு இடத்தை காலி பண்ணுவோம்."

இது போன்ற சம்பாஷணைக்ள் இப்பொழுது  கருப்பையா டீக்கடையில் ஒலிப்பது சகஜமாகிவிட்டது. இதையெல்லாம் கருப்பையா காதில் வாங்கி கொள்வதே கிடையாது. அவன் சிந்தனை எல்லாம், கிராமத்திலிருந்து வரப்போகிற சேகரை பற்றியே இருந்தது. கிளம்ப்றதுக்கு  முன்னால போன் பண்றதா சொல்லியிருந்தானே?  ஏன் இன்னும்  போன் பண்ணல?. இந்த சிந்தனையிலேயே டீ கிளாஸை கழுவிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் நோக்கியா மொபைல் " நாக்கமுக்கு" டோனில் அலற ஆரம்பித்தது. நம்பரை பார்த்தான். கொலையான்பட்டி சேகர் தான். ஆன் பட்டனை அழுத்தி பேச ஆரம்பித்தான்.
"என்னப்பா சேகர். எப்படி இருக்க. எப்ப இங்க வரப்போற?"  கருப்பையா.

" நல்லா இருக்கேன் அண்ணே!. நான் வந்துட்டே இருக்கேன். பஸிலதான் வாறேன். காலையில டாண்னு 8 மணிக்கு அங்க இருப்பேன். என்ன சரியா?" எதிர் முனையில்.
"சரி. போனை வைச்சுறேன். நேர்ல பேசிக்குவோம்." போனை ஆப் செய்தான் கருப்பையா. அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு வெளிச்சம்.

தொடரும்....